தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர் திறந்து வைத்த அரசுப் பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

1 mins read
6bf6926d-e916-4fda-9c9c-ee0e53c78861
சிங்களாந்தபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறையில் பெயர்ந்து விழுந்து கிடக்கும் மேற்கூரை சிமென்ட் பூச்சு. - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டட மேற்கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து இளநிலைப் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 34 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கான இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டடம் ரூ.30.50 லட்சத்தில் கடந்த ஆண்டுதான் கட்டப்பட்டது.

இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தங்களது வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து வகுப்பறை முழுவதும் விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரிணி கூறுகையில், “பள்ளி மேற்கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த விவகாரம் தொடர்பில், துறையூர் ஒன்றிய இளநிலைப் பொறியாளர்கள் பெரியசாமி, தங்கராசு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

“இளநிலைப் பொறியாளர் கலைச்செல்வராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டட ஒப்பந்ததாரரை கறுப்புப்பட்டியலில் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்