சென்னை: வரும் 2025பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
“வரும், 2025 பொங்கல் பண்டிகையின்போது இலவச வேட்டி, சேலை பயனாளிகளுக்கு வழங்குவதுடன், முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கும் வழங்கவும், நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,” என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக, 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, கூடுதலாக தேவைப்படும் தொகை மீண்டும் வழங்கப்படும். கிட்டத்தட்ட 1.77 கோடி சேலை, 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்யப்படும். தரம் பரிசோதித்து, தேவைப் பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு வேட்டி, சேலை அனுப்பி வைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு வேட்டி, சேலை கிடைப்பதை விரல் ரேகை பதிவு மூலமாக உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய் துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.