புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,500 உதவித்தொகை

புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2,500 உதவித்தொகை

1 mins read
a5ceac68-b5a5-4804-ab97-10a2434cbfb8
புதுவை யூனியன் பிரதேசம். - படம்: ட்ரீபோ கிளப்

புதுச்சேரி: புதுவையில் 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்தர உதவித்தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்படுகிறது.

புதுச்சேரியில் பாரதி பூங்கா எதிரே துணை நிலை ஆளுநர் மாளிகை செயல்பட்டு வருகிறது. அது பழைய கட்டடம் என்பதால் தற்போது அங்கு புதுப்பிப்புப் பணி நடைபெறவுள்ளது.

இதன் தொடர்பாக ஆளுநர் மாளிகை, “புதுச்சேரி மாநிலத்தில் ஏழ்மை நிலையில் உள்ள 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்தர உதவித்தொகை ரூ.2,500ஆக உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. இதன் மூலம் 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறுவர். இதற்காக ரூ.16.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

“முதியோர், ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்தர உதவித்தொகையை அளிப்பதற்கான ஒப்புதல் கோப்பில் கையெழுத்திடப்பட்டது. இதன்படி, 196,616 பயனாளிகளுக்கு ரூ. 2,500, ரூ. 3,000, ரூ.4,000 வழங்க ஏப்ரல் மாதத்திற்கான தொகையாக ரூ.56.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிப்டிக் நிறுவன பங்குதாரர்களுக்கு (புதுச்சேரி அரசு, ஐடிபிஐ வங்கி) பங்குத் தொகை ரூ.37.76 லட்சம் மற்றும் சிறப்பு பங்குத் தொகை வழங்குவதற்காக ஒப்புதல் கோப்பில் கையெழுத்திடப்பட்டது,” எனக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்