மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சு.வெங்கடேசன்

1 mins read
c17c5585-af9c-4612-841f-ec7dbc622ef4
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்காக விழுப்புரம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருடைய உடல்நிலை தேறியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

முன்னதாக, அமைச்சர்கள் பொன்முடி, சி.வி. கணேசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் ஆகியோர் சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கூடவே அவருக்கு முதுகுவலி மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 6 மணி நேரம் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, டி.கே.ரங்கராஜன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்