கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு விதை, உரம் விற்பனை

கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு விதை, உரம் விற்பனை

கோப்புப்படம்: மாலை மலர்

06 Oct 2026 - 7:30 pm

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் பயிர்ச் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக தரமான விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் நேரடியாக ரொக்கப் பணத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

இதுநாள் வரை, கூட்டுறவு சங்கங்களில் குறுகிய காலப் பயிர்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே கடனின் ஒரு பகுதியாக இடுபொருள்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

புதிய நடவடிக்கையின்படி, கடன் பெறாத விவசாயிகள், கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத பொது விவசாயிகளும் பயனடையும் வகையில் இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது பயிர்ச் சாகுபடிப் பரப்பு, நில ஆவணங்களைக் காண்பித்து, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மிகாமல், ரொக்கம் செலுத்தி விதைகள், உரங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

போலி உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியார் கடைகளின் சுமையிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், தட்டுப்பாடின்றித் தரமான இடுபொருள்கள் கிடைக்கச் செய்யவும் இந்த ஏற்பாடு வழிவகுக்கும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் சாகுபடி பருவத்தில் விவசாயிகளுக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்