பழுதடைந்த கட்டடங்களைப் பயன்படுத்துவதைப் பள்ளிகள் தவிர்க்க வேண்டும்: அன்பில் மகேஸ் அறிவுறுத்து

1 mins read
3e00b842-ed50-4694-be29-f620372fb56b
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். - படம்: ஊடகம்

சென்னை: பருவமழை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (அக்டோபர் 17ஆம் தேதி) நடைபெற்றது.

தற்போதைய வடகிழக்குப் பருவமழை காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு மருத்துவ உதவிகள், கட்டடங்களின் உறுதித் தன்மை உள்ளிட்ட தலைப்புகளில் பள்ளிகளின் கருத்துகளை அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், பருவமழையின்போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை உறுதிப்படுத்தவும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பருவமழைக் காலங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்