தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்து ‘மரங்கள் மாநாடு’ நடத்தும் சீமான்

1 mins read
e741b57f-a2e9-4231-a0cb-b7c9bbef93ef
சீமான். - படம்: ஊடகம்

திருச்சி: ஆடு மாடுகளுக்காக மாநாடு நடத்திய ​நாம் தமிழர் கட்சி, அடுத்து மரங்களுக்காக குரல் கொடுக்கும் என அக்​கட்​சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி இம்மாநாடு நடை​பெறும் என்று அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

“ஆடு மாடு இல்​லாமல் மண் வளம் பெறாது. அதனால்​தான் மதுரை விரகனுாரில் கால்​நடை மாநாடு நடத்​தினேன். அடுத்​த​தாக நாம் தமிழர் கட்சி சார்​பில் 10,000 மரங்​களுக்கு மத்​தி​யில் மாநாடு நடை​பெறும்.

“மரங்களுக்காகப் பேசி, அவைகளுக்காகவும் குரல் கொடுக்கப் போகிறேன்,” என்றார் சீமான்.

தமிழகத்தில் விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் போராட்​டம் நடத்​தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் கொள்​கை​களிலிருந்​து திமுக அரசு எவ்விதத்​தி​லும் மாறு​பட​வில்​லை என்றார்.

மத்​தி​யில் கூட்​டணி ஆட்​சி​யில் பங்​குபெறும் திமுக, மாநிலத்​தில் கூட்​டணி கட்​சிகளுக்கு ஆட்சி​யில் ஏன் பங்கு தரு​வ​தில்​லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“ஓரணியில் தமிழகம் என்ற பெயரில், ஒரு கோடி பேரை உறுப்​பினர்​களாக இணைத்​துள்​ள​தாக கூறும் திமுக, தேர்லின்போது வாக்​குக்குப் பணம் கொடுக்​காமல் இருக்குமா?

“மரங்கள் மாநாடு நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,” என்றார் சீமான்.

குறிப்புச் சொற்கள்