சென்னை: கட்சிப் பெயரைச் சொல்லி சிலர் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ந்து வரும் ஒரு கட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும் என்றார்.
அண்மையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் திடீரென கட்சியை விட்டு விலகினர். இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இதையெல்லாம் நான் பெரிய பிரச்சினையாகக் கருதவில்லை,” என்று சீமான் பதில் அளித்தார்.
“முன்னாள் நிர்வாகிகள் சிலர் தாலியை வைத்து கட்சி நடத்தியதாகச் சொல்கிறார்கள். அப்படி யாராவது இருந்தால் என்னிடம் அழைத்து வாருங்கள்.
“பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். என் முகத்துக்காக யாரும் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கவில்லை,” என்றார் சீமான்.


