தவெக வேட்பாளர் டாக்டர். டி.கே. பிரபுவிடம் ஏறக்குறைய 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் சீமான் தோல்வி அடைந்துள்ளார்.
60,689 வாக்குகள் பெற்று 28,296 வாக்குகள் முன்னிலையுடன் டாக்டர் பிரபு வெற்றியை உறுதி செய்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி இரண்டாம் இடத்தையும் அமமுக மூன்றாம் இடம் பிடித்த நிலையில், சீமான் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சீமான்17,926 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை இழந்துள்ளார்.
சீமானின் நேரடிப் போட்டி, காங்கிரசின் செல்வாக்கு என அத்தனை சவால்களையும் மீறி காரைக்குடியில் தவெக நிகழ்த்திய அரசியல் மாற்றம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
காரைக்குடி தொகுதியில் சீமான் நேரடியாகப் போட்டியிட்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. “மாற்றம் எனது கொள்கை அல்ல, எனது உயிர்” என முழங்கி தொகுதியின் ஒவ்வொரு மூலைக்கும் சீமான் சென்றார்.
காரைக்குடி தொகுதி கடந்த காலங்களில் காங்கிரசின் வலுவான கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. 2021ல் எஸ். மாங்குடி வெற்றி பெற்றபோது, அது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பலமாகப் பார்க்கப்பட்டது.
கடந்த தேர்தலில் ஏறக்குறைய 35 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், இம்முறை தனது செல்வாக்கை பெருமளவு இழந்துள்ளது.
தவெக வேட்பாளர் மருத்துவர் பிரபு வெற்றி பெற்றிருப்பது தற்காலிகமானதல்ல. அதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.

