நாட்டை ஆள்வோருக்கு ஏன் தகுதித் தேர்வு எழுதுவதில்லை என சீமான் கேள்வி

1 mins read
fa2a7025-fddf-4d38-a864-cf329076cf13
சீமான். - படம்: ஊடகம்

கோவை: நாட்டை ஆள்பவர்களுக்கு எந்தத் தகுதித் தேர்வும் கிடையாதா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக்கூடாது என்றும் மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்காது என்றும் கோவையில் அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோமா எதிர்க்கிறோமா என்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும்.

“அனைத்துக்கும் தேர்வு வைக்கின்றனர். ஆனால், மொத்த நாட்டையும் நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் தேர்வு எழுதுவதில்லை. இந்த நாட்டில் மட்டும் தான், எந்தத் தகுதியுமே இல்லாதவர் நாட்டை ஆளும் தகுதி பெற முடியும்.

“ஒரு வழக்கறிஞர் நீதிபதி ஆகவும், மருத்துவம் படிக்கவும் ஆட்சியர், அதிகாரிகளாக பதவியும் பொறுப்பும் பெற தேர்வு எழுத வேண்டும். ஆனால், நாட்டை ஆள எந்தத் தேர்வும் எழுத வேண்டாம்,” என்றார் சீமான்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒருநாள் தொப்பி போட்டு வேடம் போடுவதாகக் குறிப்பிட்ட அவர், நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இப்படியெல்லாம் வேடம் போடுவது விஜய்க்குப் பிடித்திருக்கிறது என்றார்.

“மக்களின் உணவுக்காக அல்ல, உணர்வுகளுக்கான உரிமைக்கானவன் நான். இப்படியெல்லாம் விஜய் வேடம் போடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை. எனவே, இதை விட்டுவிடலாம்,” என்று சீமான் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்