சீமானின் சொத்து மதிப்பு ரூ.3.74 கோடி

சீமானின் சொத்து மதிப்பு ரூ.3.74 கோடி

1 mins read
மனைவியிடம் மட்டும் ரூ.2.08 கோடி மதிப்புள்ள 1,600 கிராம் தங்கம் உள்ளது
5df4c33a-d923-4a04-910c-8e4fc50a07e4
சீமான் திங்கட்கிழமை (மார்ச் 30) காரைக்குடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  - படம்: நாம் தமிழர் கட்சி

மதுரை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கட்கிழமை (மார்ச் 30) காரைக்குடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது தனக்கும், தனது மனைவிக்கும் ரூ.3.74 கோடி சொத்துகள் உள்ளதாகச் சீமான் தெரிவித்தார்.

சீமானின் கையிருப்பில் ரூ.50,000, வங்கி இருப்பு ரூ.7.72 லட்சம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.19.50 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.39.81 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளன.

மொத்தக் கடன் ரூ.5.11 லட்சம். மேலும், அவர் மீது 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதேபோல் அவரது மனைவிக்குக் கையிருப்பு ரூ.35,000, வங்கி இருப்பு ரூ.5.27 லட்சம், பங்கு முதலீடு ரூ.3.50 லட்சம், ரூ.25 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2 வாகனங்கள், ரூ.2.08 கோடி மதிப்புள்ள 1,600 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.2.57 கோடி அசையும் சொத்துகள் உள்ளன.

மேலும் அந்தத் தம்பதிக்கு ரூ.51 லட்சம் மதிப்புள்ள 25.45 ஏக்கர் வேளாண் நிலம், ரூ.36 லட்சம் மதிப்புள்ள 10 ஏக்கர் வேளாண் இல்லாத நிலம் என ரூ.87 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. மொத்தக் கடன் ரூ.18.29 லட்சம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்