சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

1 mins read
7409fe35-88f7-4214-9977-512366ed4d46
சென்னை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பொட்டலம். - படம்: ஊடகம்

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இதுதொடர்பாக இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்குப் பெட்டகத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதித்தபோது அதில் 112 கிலோ ‘சூடோ எபிட்ரின்’ என்ற போதைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சொகுசு கார்கள், ரூ.3.9 லட்சம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இருவரைக் கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இதேபோன்று நான்கு முறை ஆஸ்திரேலியாவுக்குப் போதைப்பொருள்களைக் கடத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதில் அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

போதைப்பொருள் சென்னைக்கு எப்படி கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்