சென்னை: கோவை மாவட்டம், சூலூர் பல்லடத்தில் குறைகடத்தி (செமி கண்டக்டர்) பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
“மின்னணுத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மின்னணு பொருட்கள் உற்பத்தி வளர்ச்சிக்காகவும் சென்னையில் ரூ.100 கோடியில் செமி கண்டக்டர் ஆய்வகம் அமைக்கப்படும்.
“குறை கடத்தி இயக்கம் தொடங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.400 கோடியில் ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்,” என்றும் தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரிலும் சிறிய அளவிலான டைடல் பூங்கா அமைக்கப்படும் என்றும் விண்வெளித் தொழில்நுட்ப நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.