சென்னை: மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அந்த திட்டங்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாட்டில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.திமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த சில நாள்களாக செங்கோட்டையனின் செயல்பாடுகள் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

