தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழுப்புரத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஏழு அரசுப் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை

1 mins read
c28468f3-e9ed-4176-ba99-9a227b1169ff
விழுப்புரம் அரசு மகளிர் மாதிரிப் பள்ளி. - படம்: தமிழக ஊடகம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாகச் சேதமடைந்த ஏழு அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 26ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு வார விடுமுறைக்குப் பின் திங்கட்கிழமை (டிசம்பர் 9) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் திறக்கப்பட்ட நிலையில் ஏழு அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிகளில் மறுசீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்