தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவை பள்ளியில் பாலியல் தொல்லை; யோகா ஆசிரியர் கைது

1 mins read
0f3f8e19-ac16-4621-bafc-eab2772a2b11
ஓவிய ஆசிரியராகவும் யோகா கலை ஆசிரியராகவும் பணியாற்றி வந்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  - கோப்புப்படம்: ஊடகம்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் உள்ள ஒரு சிபிஎஸ்இ பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துவந்த ஆசிரியர் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை கைதுசெய்தனர்.

ஓவிய ஆசிரியராகவும் யோகா கலை ஆசிரியராகவும் பணியாற்றி வந்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜன் (56), அவர் பணிபுரிந்த பள்ளியில் பயின்ற மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் மேற்கொண்ட விசாரணையில், அந்த யோகா கலை ஆசிரியர், மேலும் சில மாணவிகளுக்கும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் மீது பள்ளி முதல்வர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து ஆசிரியர் ராஜனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்