சென்னை: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது.
48 வயதான சங்கர் தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியில் தங்கியிருந்தபோது அவரது காரில் இருந்தும் உதவியாளரிடம் இருந்தும் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
எனினும் இந்த விசாரணைக்கு சவுக்கு சங்கர் நேரில் முன்னிலையாகவில்லை. அவரது வழக்கறிஞர் வாயிலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் மனுவை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, வழக்கு விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி சென்னையில் தனது அலுவலகத்தில் இருந்த சவுக்கு சங்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.