தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ஆறு மீனவர்கள் சென்னை வருகை

1 mins read
0e0b68df-b287-4843-b236-b954bee15f2a
விடுதலையான மீனவர்கள். - படம்: ஏஎன்ஐ

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆறு தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை (ஜனவரி 30) சென்னை வந்தடைந்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆறு மீனவர்களையும் விடுவிக்க இலங்கை ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த ஆறு பேரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேசுவரத்துக்கு அனுப்பிவைத்தனர்.

குறிப்புச் சொற்கள்