ஆறு விமானங்கள் ஒரே நாளில் ரத்து; சிங்கப்பூர், மும்பை பயணிகள் அவதி

ஆறு விமானங்கள் ஒரே நாளில் ரத்து; சிங்கப்பூர், மும்பை பயணிகள் அவதி

படம்: இணையம்

16 Jul 2025 - 3:49 pm

1 mins read

சென்னை: போதுமான பயணிகள் இல்லாததால் ஆறு விமானச் சேவைகள் புதன்கிழமை (ஜூலை 16) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சிங்கப்பூர், மும்பை பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்படும் மூன்று விமானங்கள், சென்னைக்கு வரும் மூன்று விமானங்கள் என ஆறு விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வருகை, புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த மிகக் குறைந்தளவிலான பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் விமான பயணச்சீட்டுகளும் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுஇந்தியாவிமானச் சேவைரத்துசென்னை