கொழும்பு: இலங்கையின் உயரிய ஸ்ரீலங்கா மித்ர விபூஷணா விருது இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அடுத்து இலங்கை சென்றார். அங்கு இலங்கையின் ஆறு மூத்த அமைச்சர்கள் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை அதிபர், இந்திய பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, மின்னிலக்கமயமாக்கல், தற்காப்பு, சுகாதாரத் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பின்னர், இலங்கையின் உயரிய ஸ்ரீலங்கா மித்ர விபூஷணா விருதினை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
தமது இந்தப் பயணத்தின்போது தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை தரப்புடன் மோடி விவாதித்தார்.
அவரது இலங்கைப் பயணத்தையொட்டி, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.