சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மீண்டும் தங்கம் கடத்தல் நடைபெற்றுள்ளது.
மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் கொழும்புவில் இருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் இருந்து இரண்டு கிலோ 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் தங்கத்தின் அனைத்துலக மதிப்பு ரூ.1.75 கோடி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

