சென்னை: சூரியசக்தி மின்சார உற்பத்தியில் தமிழகம், இந்திய அளவில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழகம் இதே இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024-25ஆம் ஆண்டில் மட்டும் தமிழகம், 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.
சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில், இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளதாக அத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024-25ம் ஆண்டில் 28,286.47 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி செய்து குஜராத் மாநிலம் முதலிடத்தையும் மகாராஷ்டிரா மாநிலம் 10,687.27 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் சூரியசக்தி மின்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முனைப்புக் காட்டி வருவதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது.
சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் புதிதாக 23,500 நுகர்வோர் இணைந்துள்ளனர் என்றும் இதன்மூலம், 125 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய எரிசக்தித் துறை தெரிவித்தது.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் மூன்று லட்சம் நுகர்வோரை
தொடர்புடைய செய்திகள்
சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.