பயணிகள் சேவை, வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம்

பயணிகள் சேவை, வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம்

1 mins read
e09e2217-0f15-4fb0-8d69-91adb57aa58c
கடந்த நிதியாண்டிலும் ரயில் இருக்கை முன்பதிவில் தெற்கு ரயில்வே முதலிடத்தில் நீடித்தது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: பயணிகளுக்கான சேவை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்திய ரயில்வேயின் ஓர் அங்கமான தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதித்துள்ளது.

கடந்த நிதி​யாண்​டில், பயணி​களுக்குச் சிறப்பான சேவை அளித்து, தெற்கு ரயில்வே ரூ.8,271.47 கோடி வரு​வாய் ஈட்டியுள்ளது.

இது இந்​திய ரயில்​வே​யின் மற்ற மண்​டலங்​களைவிட அதிகமாகும்.

இதற்கு முந்தைய நிதியாண்டைவிட இது ரூ.735.78 கோடி (9.8%) அதி​க​மாகும். மேற்கு, மத்திய ரயில்வே முறையே 2, 3ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.

கடந்த நிதியாண்டில், தெற்கு ரயில்​வே 229 சிறப்பு ரயில்​களை இயக்கி 2,513 பயணங்​களை மேற்கொண்டது. இதன் மூலம் 32.97 லட்​சம் பேர் பயணம் மேற்கொண்டு பயனடைந்தனர்.

ஒவ்வொரு பயணத்​திலும் சராசரி​யாக 1,312 பயணி​கள் இடம்பெற்ற வகையில், தேசிய அளவில் (சராசரியாக 894 பயணிகள்) முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த நிதியாண்டிலும் ரயில் இருக்கை முன்பதிவில் தெற்கு ரயில்வே முதலிடத்தில் நீடித்தது.

குறிப்புச் சொற்கள்