சென்னை: எந்தச் சூழலிலும் லஞ்சம் வாங்கக் கூடாது எனக் காவல்துறையினருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னை காவல்துறை சார்பாக ‘ஊழல் ஒழிப்புத் தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்தப் பிரிவுக்கென தனி வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த எண்ணை நேரடியாகத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
காவலர்கள் யாரும் உயர் அதிகாரிகளைக் குளிர்விக்கப் பணம் செலவு செய்யத் தேவையில்லை என்றும் தமக்காகவும் யாரும் எந்தவிதத் தேவையில்லாத செலவுகளையும் செய்ய வேண்டாம் என்றும் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
காவல்நிலையத்துக்குப் புகாருடன் வருபவர்களின் மனுவில் உள்ள உண்மைத்தன்மையை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் மாறாக, புகார்தாரர்களின் பின்னணி, பணபலம் குறித்து ஆராயக்கூடாது என்றும் ஆணையர் அமல்ராஜ் வலியுறுத்தினார்.


