அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படை

அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படை

1 mins read
284d90e5-06a0-4e5a-b164-6239122bc0d3
முதல்வராகப் பதவியேற்றபின் அந்த விழாவிலேயே போதைப்பொருளைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார் விஜய். - கோப்புப் படம்: நக்கீரன்
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் போதைப்பொருள் கலாசாரம் வேரூன்றிவிட்டதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முந்தைய அரசாங்கம் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்குச் சீர்கேட்டுக்கு முதல் காரணம் மாநிலத்தில் பரவலாக உள்ள போதைப்பொருள் புழக்கம்தான் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே அரசின் இலக்கு என்றும் அதற்காக முழுமூச்சுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதை மனத்திற்கொண்டு முதற்கட்டமாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக ஆளுநர் அறிக்கை தெரிவிக்கிறது.

“கள்ளச் சாராய நடமாட்டம், சட்டவிரோத மது விற்பனையை முற்றிலும் ஒழிக்கவும் இத்துறையில் முழுமையான கண்காணிப்பை ஏற்படுத்தவும் கடும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் ஆயத்தீர்வை வசூல், மதுபான விநியோகத்தில் உள்ள முறைகேடுகள் தடுக்கப்படும்,” என ஆளுநர் உரை மூலம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்