தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு

1 mins read
3318856c-03f6-4860-841b-164d301781ca
காட்டுவளத்துறை மற்றும் கதர் கிராமத்துறை அமைச்சர் பொன்முடி. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அமைச்சர் பொன்முடி, மார்ச் 19ஆம் தேதி விசாரணைக்கு நேரடியாக முன்னிலையாகும்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2006-2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்தது  தொடர்பில் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. இந்தநிலையில், அமலாக்கத்துறை கூடுதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு என லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.

இதையடுத்து வருகிற மார்ச் 19ஆம் தேதி பொன்முடி நேரில் முன்னிலையாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்