தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் சிகிச்சைப்பிரிவு

1 mins read
ecd0d929-8841-452c-a5eb-21894c35d1d5
சென்னையில் காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. - படம்: பிக்சாபே

சென்னை: பருவமழை காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 50 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சளிக்காய்ச்சல், டெங்கி, நுரையீரல் தொற்று ஆகியவை அண்மை நாள்களாக அதிகரித்துள்ளன.

பெரும்பாலானோர் வெளிப்புற நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றாலும், டிசம்பர் மாதம் வரை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப சிறப்புப் பிரிவுகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, வியாழக்கிழமை (நவம்பர் 7) திறந்து வைக்கப்பட்டன.

“டெங்கி, சளிக்காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், 50 படுக்கையுடன் கூடிய சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதில், 24 மணிநேரமும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்,” என்று மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்தார்.

சராசரியாக 15 பிரிவுகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்