தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை - மேற்கு வங்காளத்திற்கு இடையே சிறப்பு ரயில் சேவை

1 mins read
457044c5-1495-419b-aaff-f5df766334bf
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஷாலிமர் வரை இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மேற்கு வங்காளத்தின் ஷாலிமர் நகருக்கு சென்னையிலிருந்து வாரந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே துறை செய்திக்குறிப்பு வழி தெரிவித்துள்ளது.

கோடை காலத்தில் அதிகமானோர் சொந்த ஊருக்குத் திரும்புவதாலும் சென்னை வாசிகள் சுற்றுப்பயணம் செல்வது அதிகரிப்பதாலும் இந்தச் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுவதாகத் தெரிகிறது.

மேற்குவங்க மாநிலம் ஷாலிமரிலிருந்து ஏப்.7, 14, 21 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் இரவு 11.30 மணிக்குச் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.9, 16, 23 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.20 மணிக்கு ஷாலிமரை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது என்று தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கத்தின் ஷாலிமர் நகருக்கு தினந்தோறும் காலை 7 மணிக்கு இயக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்தச் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்