விஜய்யின் தேர்தல் வெற்றிக்காக இலங்கை எம்.பி.க்கள் வாழ்த்து

விஜய்யின் தேர்தல் வெற்றிக்காக இலங்கை எம்.பி.க்கள் வாழ்த்து

1 mins read
014cb3a7-d34e-47c8-90b3-33585c1b2d43
நமல் ராஜபக்சே, விஜய். - படம்: இந்தியா டுடே

ராமேசுவரம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமல் ராஜபக்ச, எம்எல்ஏ எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய வாழ்த்தைப் பதிவு செய்துள்ளனர்.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்​சவின் மகனும் இலங்கை​ எம்பியு​மான நமல் ராஜபக்ச வெளியிட்ட வாழ்த்​துச் செய்​தியில், தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றிபெற்​ற ஜோசப் விஜய் சந்​திரசேகருக்கு வாழ்த்​துகள் என்றும் மக்​களுக்​குத் தேவை​யான பயனுள்ள திட்​டங்​களைச் கொண்டு சேர்க்க விஜய்க்கும் அவரது குழு​வினருக்​கும் மன வலிமை​யும் துணிச்​சலும் கிடைக்க வாழ்த்​துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டு மக்​களை​யும் பாதிக்​கும் பல்​வேறு முக்​கிய விவ​காரங்​களில், இலங்​கை​யுடன் வலு​வான மற்​றும் ஆக்​கபூர்​வ​மான உறவை வளர்த்​தெடுக்க புதிய தலைமை வழி​வகுக்​கும் எனத் தாம் நம்புவதாகவும் நமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்​கை​யின் நாடாளு​மன்ற உறுப்​பினர் எம்​எல்​ஏஎம் ஹிஸ்​புல்லா வெளி​யிட்​டுள்ள வாழ்த்துச் செய்​தியில், மக்​கள் மையப்​படுத்​தப்​பட்ட அரசி​யல் பயணத்​தைத் தொடங்​கும் இந்த முக்​கிய தருணத்​தில், தவெக தலைவர் விஜய்க்குத் தேவை​யான மனவலிமை, தொடர் வெற்றி கிடைக்க வாழ்த்​துவதாகத் தெரிவித்துள்ளார்.

“இலங்கை, தமிழக மக்​களுக்​கிடையே​யான வரலாற்​று, கலா​சார மனி​தாபி​மான உறவு​கள் பல தசாப்​தங்​களாக வலு​வாக இருந்து வரு​கின்​றன. குறிப்​பாக இலங்கை எதிர்​நோக்​கிய பல்​வேறு சவாலான கால​கட்​டங்​களில், தமிழக அரசும் தமிழக மக்​கள் வழங்​கிய ஆதர​வும் ஒத்​துழைப்​பும் எப்​போதும் நினைவுகூரத்​தக்​கவை,” என்று ஹிஸ்புல்லா மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்