தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாமகவின் புதிய செயல்தலைவராக ஸ்ரீகாந்தி தேர்வு: ராமதாஸ்

1 mins read
f501f1e1-1846-4183-8218-82ee36c0e41a
ராமதாஸ், ஸ்ரீகாந்தி. - படம்: ஊடகம்

தர்மபுரி: பாமகவின் புதிய செயல்தலைவராக ஸ்ரீகாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கட்சிக்கும் தமக்கும் அவர் பாதுகாப்பாக இருப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. கட்சியின் தலைவர் யார், யாருக்கு அதிக அதிகாரம் என்பது தொடர்பாக இருதரப்பினரும் மோதி வருகிறார்கள்.

அன்புமணி நியமித்த நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கியதுடன், கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தர்மபுரியில் சனிக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரு ராமதாஸ், கட்சியின் செயல்தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என அறிவித்தார்.

சில நாள்களுக்கு முன்புதான் கட்சி செயல்தலைவர் பதவியில் இருந்த அன்புமணியை நீக்கியிருந்தார் ராமதாஸ். இந்நிலையில், அந்தப் பதவியில் தன் மகள் ஸ்ரீகாந்தியை நியமிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய ஸ்ரீகாந்தி, தன் தந்தை ராமதாஸ் கட்சி செயல்தலைவர் பதவியை தனக்கு அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றார். இனி பாமகவின் வளர்ச்சிக்கு கடுமையாகப் பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்