ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி: ஆறு பேர்மீது வழக்குப் பதிவு

ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி: ஆறு பேர்மீது வழக்குப் பதிவு

1 of 2
படம்: இந்து தமிழ் திசை
படங்கள்: இந்து தமிழ் திசை

20 Sep 2026 - 5:48 pm

1 mins read

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான, ரூ.50 கோடி மதிப்பிலான பங்களாவுடன் கூடிய 7,515 சதுர அடி இடத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகக் கூறி, திமுக ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் என்.ராம்குமார், முன்னாள் சார்-பதிவாளர் உட்பட ஆறு பேர்மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் அமைந்துள்ள இந்த இடத்தின் மூலப்பத்திரம் தொலைந்துவிட்டதாக புதுவையில் சான்றிதழ் பெற்று, 2022ல் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்ரீரங்கம் கோவில் சொத்து முறைகேடு, மோசடியில் ஈடுபட்டவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான ஆவணங்களின்படி உள்ள 329 ஏக்கர் நிலங்களில், சுமார் ரூ.50 கோடி சந்தை மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து திமுக பகுதி செயலாளர் ராம்குமார் என்பவர் தன் பெயருக்கு மாற்றி கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டி, அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டார்.

இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் அளித்த புகாரின்பேரில் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதில் தமிழக முதல்வர் விஜய் மிகத் தெளிவாக உள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்