தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தின் எதிர்காலத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: ஸ்டாலின்

1 mins read
72வது பிறந்த நாளில் ஸ்டாலினுடன் திமுகவினர் உறுதிமொழி
fcaed886-0f32-4679-8c60-161178fb530b
திமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின். அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, டி.ஆர் பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். - படம்: ஊடகம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது 72வது பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாடினார். ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோருடன் முதல்வர் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திமுக நிர்வாகிகள், அவரவர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றார். தொடர்ந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை கருணாநிதியின் படத்தை மலர் தூவி வணங்கினார்.

அப்போது, ‘‘தமிழகத்தின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். முக்கியமாக இந்தி திணிக்கப்படுவதை என்றும் எதிர்ப்போம். தமிழகத்தின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழகம் போராடும்; தமிழகம் வெல்லும்,” என முதல்வர் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதற்கிடையே, பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் தெளிவாகப் பேசியிருந்தேன். மாநிலத்தில் சுயாட்சி வேண்டும். குறிப்பாக, இந்தி திணிப்பைக் கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கையே அமலில் இருக்க வேண்டும். இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி. நாடு, மாநிலம், மாநில உரிமையைப் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கவலை,” என்றார்.

குறிப்புச் சொற்கள்