சென்னை: பொங்கல் விழாவில் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் தனது மனைவியுடன கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், சிலம்பம் சுழற்றியதை அடுத்து அங்கிருந்தோர் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்தப் பொங்கல் விழாவில் தொகுதி மக்களுக்கு அவர் பல்வேறு பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கினார். பின்னர் பசுக்களுக்கும் உணவளித்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் உற்சாகமாக சிலம்பம் சுழற்றினார்.
மிகவும் லாவகமாக சிலம்பம் சுழற்றியதைக்கண்டு அங்கிருந்த சிலம்பப் பயிற்சி மாணவர்களும் பொதுமக்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

