சிவகாசி: பட்டாசுத் தொழிலாளிகளைக் கௌரவப்படுத்தும் வகையில், சிவகாசியில் நினைவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள முக்கிய சாலைச் சந்திப்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, பட்டாசுத் தொழிலாளிகளின் கடும் உழைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது என அதைத் திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கினார்.
அப்போது, சிவகாசியின் அடையாளமாக விளங்கும் பட்டாசுத் தொழிலாளர்களைப் போற்றும் வகையில், நகரின் நுழைவாயிலில் சிலை திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பட்டாசுத் தொழிலில் மட்டுமல்லாமல், கல்வியிலும் சிவகாசி முன்னோடியாக உள்ளதாக பாராட்டினார்.
சிவகாசி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.