புதுடெல்லி: கொடநாடு விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தர விடக் கோரி சமூக ஆர்வலர் டிரா பிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது என அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். "முதல்வர் பழனிசாமி மீதே புகார் இருப்பதால் தமிழக போலி சார் விசாரிப்பது சரியல்ல. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்," என்று டிராபிக் ராம சாமி மேலும் வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே கொடநாடு விவகாரத்துடன் தொடர்புள்ள சயான், மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் வைத்து தமிழக போலிசார் கைது செய்துள்ளனர். பின்னர் இருவரும் சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சிபிஐ விசாரணைக்கு டிராபிக் ராமசாமி வலியுறுத்து
1 mins read

