பொங்கல்: கடைகளில் மக்கள் கூட்டம்

பொங்கல்: கடைகளில் மக்கள் கூட்டம்

1 mins read

சென்னை: பொங்கல் பண்டிகைக் காக புத்தாடைகள், புதுப் பொருட் கள் வாங்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் சென்னையில் ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட் கள் விற்கும் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் சென்றனர். கடந்த மூன்று தினங்களில் தமிழக அரசு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கிய போதி லும், நேற்று ஊருக்குச் செல்ல பயணச்சீட்டு கிடைக்காமல் நூற் றுக்கணக்கானோர் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை முழுவதும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலி சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் பல் வேறு வகையிலான பூக்கள், பொங்கல் மண்பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தார் ஆகியவை குவிந்தன. நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் கோயம் பேடு சந்தைக்கு வந்தனர். இத னால் வியாபாரம் களைகட்டியது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை கிடைத்துள் ளதால் இந்த ஆண்டு மக்களிடம் வழக்கத்தைவிட அதிக உற்சாகம் காணப்பட்டது.