கொஞ்சிப் பேசி வந்த கிளி கோபத்தில் கோயிலில் தஞ்சம்

கொஞ்சிப் பேசி வந்த கிளி கோபத்தில் கோயிலில் தஞ்சம்

1 mins read

கோவை: கொஞ்சிப் பேசி வந்த கிளி ஒன்று தன்னை வளர்ப்பவர் மீது கோபம்கொண்டு பறந்து சென்று ஆலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிளியை திரும்பி தன் னிடமே வந்துவிடும்படி அதை வளர்த்து வந்தவர் அழைத்தாலும் வரமாட்டேன் என்று அந்தக் கிளி அடம்பிடிப்பதாகவும் கூறப் படுகிறது. கோவை, பாப்பநாயக்கன் பாளையம், பழையூரைச் சேர்ந்த வர் முருகேசன், 48, தொழிலாளி. வீட்டில் பாலும் பழமும் கொடுத்து வளர்த்து வந்த கிளியை, வீட் டிற்கு வெள்ளை அடித்ததால் வெளியில் வைக்க அது கூச்சல் போட்டுள்ளது.

முருகேசனின் மகன் பிரசாந்த் கிளியிடம் கோபத்துடன் பேசிய தால் கிளி பறந்துசென்று அங் குள்ள மாரியம்மன் கோயில் சிலையின் தோளில் அமர்ந்தது. முருகேசன் கூறியபோது, "நாங்கள் கிளியைப் பாசமாக வளர்த்தோம். என் மனைவியை 'பாப்பு' என்றுதான் கிளி கூப் பிடும். என் மகன் பிரசாந்த் கோபத்துடன் 'போ' என்று கூறியதால் கிளிக்கு வருத்தம் போலிருக்கிறது. கோயிலில் வந்து உட்கார்ந்துகொண்டு இரு நாட்களாக வரமாட்டேன் என் கிறது," என்றார். கோயில் பூசாரி ஹரிபிரசாத் கூறியபோது, "கிளி அம்மன் சிலையின் தோளில் அமர்ந்தது. பிடிக்கமுயன்றபோது கொத்த முயன்றது. கொய்யாப்பழம், மிளகாய் வைத்ததும் சாப்பிட்டது. அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்தபோது வெளி மண்டபத்தில் அமர்ந்தது. அலங்காரம் செய்தபின் அம்மன் தோளில் அமர்ந்தது," என்றார்.