அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் குதித்த 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் குதித்த 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள்

2 mins read
ac8fb2a7-e7b0-440e-91d0-7bfea8415d46
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் குதித்த 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள் -
Google News Preferred Icon

மதுரை: மதுரை அவனியாபுரத் தில் திமிறி ஓடும் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட் டியை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கிவைத்தார். இப் போட்டியில் மொத்தம் 691 காளைகளும் 594 மாடுபிடி வீரர் களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 46 பேர் காயம் அடைந் துள்ளனர். அத்துடன் காயம் அடைந்தவர்களுக்கு முகாமில் மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

காளைகளைப் பிடிக்கும் வீரர் களுக்குப் கைநிறைய பரிசுகளும் வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்குத் தங்கக்காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை விழாக் குழுவினர் வழங்கினர். பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பாக நடை பெறும் ஜல்லிக்கட்டு நேற்று மதுரை மாவட்டம், அவனியாபுரத் தில் கோலாகலமாகத் துவங்கியது. காளைகள், வீரர்களின் பாது காப்பிற்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பப்பட்டு இருந்தன.

ஜல்லிக்கட்டின் முதல்சுற்று வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து 2வது சுற்றில் புதிய வீரர்கள் காளைகளைத் தழுவினர். மாடுகளின் கொம்பு, வாலைப் பிடிக்கக்கூடாது, எல்லைக் கோட்டை தாண்டவேண்டாம் என வும் தெரிவிக்கப்பட்டது. மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாதுகாப்புப் பணிக் காக 1,095 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ அவசர வாகனங் களும் தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் இருந்தன.

மதுரை: மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். இதில் சுமார் 16 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு முகாமில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. படம்: இந்திய ஊடகம்