கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பில் கைதானவர்கள் விடுவிப்பு

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பில் கைதானவர்கள் விடுவிப்பு

1 mins read
9bea9a33-f185-40c8-98dc-6dfc709f23cc
சயான், மனோஜ். படம்: ஊடகம் -

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பில் கைதான குற்றவாளிகள் சயான், மனோஜுக்கு எதிராக கூறப்பட்ட வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, அவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். சயான், மனோஜ் இருவரும் நாளை மறுநாள் 18ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என்றும் நீதி பதி உத்தரவிட்டுள்ளார். கோடநாடு கொலை, கொள் ளைச் சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டி காணொளி வெளியிட்ட சயான், மனோஜை மத்திய குற்றவியல் காவல்துறையினர் டெல்லியில் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது சயான், மனோஜை சிறை யில் அடைக்கவேண்டும் என்று காவல்துறையினரும் அரசு வழக் கறிஞரும் வாதம் செய்தனர். இதை ஏற்க மறுத்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கை திருப்தி கரமாக இல்லை என்று கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரையும் விடுவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந் தித்து மனு ஒன்றை அளித்தார்.