இந்தியாவின் ஆக இளம் கிராண்ட் மாஸ்டர்

சதுரங்க விளையாட்டில் இந்தியா வின் ஆக இளைய, உலகின் 2வது ஆக இளைய கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையைச் சேர்ந்த குகேஷ் (படம்). புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துலக சதுரங்கப் போட்டி யின் ஒன்பதாம் சுற்றில் தினேஷ் சர்மாவை வெற்றிகொண்டதன் மூலம் குகேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் 12 ஆண்டுகள், ஏழு மாதங்கள், 17 நாட்களே நிரம்பிய குகேஷ் இந்தியாவின் ஆக இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பைப் பெற்றார். ஐந்து வயதிலிருந்து சதுரங்கம் விளை யாடி வரும் இவர் இந்தியாவின் 59வது கிராண்ட் மாஸ்டர். முன்னதாக, சென்னையின் பிரக்னானந்தா 12 ஆண்டுகள், பத்து மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றிருந்ததே இந்தியச் சாதனையாக இருந்தது.

இதில் வியப்பு என்னவெனில், பிரக்னானந்தா விளையாடியதைக் கண்டுதான் குகே‌ஷுக்குச் சதுரங் கம் மீது ஆர்வம் பிறந்தது. ரஷ்யாவின் சேர்கே கர்ஜகின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றபோது அவருக்கு வயது 12 ஆண்டுகளும் ஏழு மாதங்களும். அதனால் வெறும் 17 நாட்களில் அந்தச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்ததில் குகே‌ஷுக்குப் பெருத்த ஏமாற்றம். "உலகின் ஆக இளம் கிராண்ட் மாஸ்டர் எனும் பெருமையை நூல் இழையில் தவறவிட்டதில் எனக்கு வருத்தம்தான். ஆயினும், அதையே நினைத்திருக்கப்போவது இல்லை. தொடர்ந்து சிறப்பாக ஆடுவதே முக்கியம். வெற்றிகளும் சிறப்பு களும் தானாக வரும்," என்றார் குகேஷ். குகே‌ஷின் தந்தை ரஜினிகாந்த், தாய் பத்மகுமாரி இருவரும் மருத் துவர்கள். குகேஷ் சாதித்ததற்கு அவனின் தந்தையே முழுமுதற் காரணம் என நெகிழ்ச்சியுடன் கூறினார் தாய் திருமதி பத்மா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!