வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பத்தைச் சேர்ந்தவர் தேவன். பரம்பரை நகைத் தொழிலாளியான இவர், கடந்த 35 ஆண்டுகளாக நகைத்தொழில் செய்துவரு கிறார். கின்னஸ் சாதனை புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் பல்வேறு வேலைப் பாடுகளைக் கொண்ட தங்க நகைகளை உருவாக்கி வருகிறார் இவர். அதன் ஒரு கட்டமாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கிராம் 900 மில்லி தங்கத்தில் மூன்று கரும்பு, பானை, அடுப்பு, விறகு, காளை மாடு, கரண்டி ஆகிய வற்றை தத்ரூபமாக உருவாக்கி அசத்தியுள்ளார். 24 மணிநேர இடைவிடாத தொடர் முயற்சியின் மூலம் இவற்றை உருவாக்கி யதாக தேவன் கூறினார்.
சிறிய தங்கத்தில் பெரிய முயற்சி
1 mins read
-

