கடத்தல் பொருட்களுடன் நடுக்கடலில் பிடிபட்ட இருவர்

கடத்தல் பொருட்களுடன் நடுக்கடலில் பிடிபட்ட இருவர்

1 mins read
776d7d02-ff3f-464c-9b4c-cda5531b5ab3
-

ராமேசுவரம்: இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும் அங்கிருந்து இந்தியாவுக்குத் தங்கம் கடத்தி வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இவற்றைத் தடுக்க மண்டபத்திலுள்ள இந்தியக் கடலோரக் காவற்படை ரோந்து நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாம்பன் கடல் பகுதியில் மர்மப்படகு ஒன்று செல் வதாக மண்டபத்திலுள்ள கட லோரக் காவற்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் ரோந்துப் படகில் விரைந்து சென்று அந்தப் படகை மடக்கினர். பாம்பனிலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் பிடிபட்ட அந்தப் படகில் இலங்கையைச் சேர்ந்த இருவர் இருந்துள்ளனர்.

இதையடுத்து படகுடன் அவர்கள் கட லோரக் காவல்படை தளத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசா ரணையில் அவர்களது பெயர் அன்புகுமரன், சிவராஜன் எனவும் மதுரையில் உள்ள ஆனைமலை அகதி முகாமில் அவர்கள் தங்கி யிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்திய ரூபாய் 1,09,000 மற்றும் அமெரிக்கா, ஹாங்காங் நாடுக ளின் நாணய நோட்டுகள், 6 கை பேசிகள், 2 ஜிபிஎஸ் கருவிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. அவ் விருவரிடமும் விசாரணை நடத் தப்பட்டு வருகிறது.

மர்மப் படகில் சென்றபோது கடலோரக் காவற்படையிடம் பிடிபட்ட அன்புகுமரன், சிவராஜன். படம்: தமிழக ஊடகம்