அடக்கிய காளையருக்கும் அடங்கா காளைகளுக்கும் பரிசு

அடக்கிய காளையருக்கும் அடங்கா காளைகளுக்கும் பரிசு

1 mins read
f42ed8cb-d924-491e-90fa-8399e4a981ad
-

மதுரை மாவட்டம் பாலமேட் டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக் கட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மொத்தம் 988 காளைகளும் 846 வீரர்களும் களத்தில் இறங்கப் பதிவு செய்திருந்தனர். காளைகளை அடக்கிப் பிடிக்க தடவைக்கு 75 நபர் கள் வீதம் கட்டம் கட்டமாக களமிறக்கப்பட்டனர். சிறந்த மாடுபிடி வீரர்கள், அவர் களிடம் சிக்காத காளைகள் கண்காணிக்கப்பட்டு போட்டியின் இறுதியில் சிறப்புப் பரிசுகளாக ஆம்னி கார், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட் டன. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெறுகிறது. படம்: தமிழக ஊடகம்