சீறிய காளைகள்: அமர்க்களமாக நடந்தேறிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

சென்னை: உலகப் பிரசித்திப் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு நேற்று விமரிசையாக நடை பெற்றது. வழக்கம் போல் இந்த ஆண்டும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக் கானோர் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தனர். நேற்று காலை சுமார் 8 மணி யளவில் தொடங்கிய அலங்காநல் லூர் ஜல்லிக்கட்டில் 960 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்க 1,400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டைக் காண எப்போதுமே வெளிநாட்டவர்கள் அதிகளவில் குவிவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் சுற்றுலாத்துறை சார்பில் முன்பதிவு செய்யப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர். இதேபோல் மதுரை, திண்டுக் கல் சிவகங்கை, திருச்சி, ஈரோடு, கோவை, தேனி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளுடன் அவற்றின் உரி மையாளர்கள் அலங்காநல்லூரில் குவிந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய சிறந்த வீரர்களுக்கும் அடக்க முடியாத காளைகளுக்கும் தங்கக்காசு, கைபேசி, சலவை இயந்திரம், தொலைக்காட்சிப் பெட்டி, பீரோ எனப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!