பொங்கலுக்கு ரூ.475 கோடிக்கு மது விற்பனை

பொங்கலுக்கு ரூ.475 கோடிக்கு மது விற்பனை

1 mins read

சென்னை: வழக்கம் போல் இந்தாண்டும் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மது விற் பனை அதிகரித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு தமிழக அர சின் 'டாஸ்மாக்' கடைகள் மது விற்பனை ரூ.475 கோடி எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சுமார் 4,800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் தினமும் ரூ. 80 கோடி மதிப்பிலான பல்வேறு மது வகை கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் போன்ற சிறப்பு, பண் டிகை தினங்களில் மதுவிற்பனை வெகுவாக அதிகரிப்பது வழக்க மாக உள்ளது. அதேபோல் இந் தாண்டும், கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான 3 நாட்களில் மது விற்பனை மூலம் ரூ.475 கோடி கிடைத்துள்ளது.