20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

1 mins read

சென்னை: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட இருபது கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நால்வர் கைதாகினர். வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் பதுக்கி வைக் கப்பட்டுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் மூலம் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.