அனைத்து காவல் நிலையங்களிலும் 'வாட்ஸ்அப்' குழு அமைக்க உத்தரவு

அனைத்து காவல் நிலையங்களிலும் 'வாட்ஸ்அப்' குழு அமைக்க உத்தரவு

1 mins read

சென்னை: அனைத்து காவல் நிலையங்களிலும் 'வாட்ஸ்அப்' குழுக்களைத் தொடங்க வேண்டும் என காவல்துறை தலைவர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாநிலம் முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள், கண்காணிப்பாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 'வாட்ஸ்அப்' குழுக்களின் நிர்வாகிகளாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர்கள் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.