பாஜகவுக்கு எதிராக மம்தா பேரணி; ஸ்டாலின் பங்கேற்க தயக்கம்

புதுடெல்லி: இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பலத்தைக் காட்டும் பேரணிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ளார். கோல்கத்தாவில் நாளை பேரணி நடைபெறும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச் சருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி காங்கிரஸ், தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத, காங்கிரஸ் மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் பேரணியில் பங்கேற்பது குறித்த முடிவை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல், அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என் பது உறுதியாகி உள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதால் மம்தா பானர்ஜியின் பேரணியில் ராகுல், சோனியா பங்கேற்க மாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார்," என்று தெரிவித்தார்.

இதற்கிடையே திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் மம்தாவின் பேரணியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்புத் தந்தும் மம்தா பானர்ஜி வரவில்லை. மாறாக அவரது சார்பில் மூத்த எம்.பி. டெரிக் ஒபி ரெய்ன் பங்கேற்றார். அதே பாணியில் மூத்த தலை வர்களையோ அல்லது மேலவை எம்.பி கனிமொழியையோ திமுக சார்பில் அனுப்பி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஏறக்குறைய அனைத்து முக்கிய எதிர்க்கட்சி களும் மம்தாவின் பேரணியில் பங் கேற்க மாட்டார்கள் எனத் தெரி கிறது. இதனால் முதல்வர் மம்தா பேரணி தோல்வியைத் தழுவலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!