சென்னை: இந்தியாவின் தென் கோடி மாநிலமான தமிழ்நாட்டில் ரூ.19,408 கோடி முதலீடு செய்யப் போவதாக கடந்த மூன்றாண்டு காலத்தில் பல நிறுவனங்கள் உறுதி தெரிவித்து இருந்தன. ஆனால் மாநிலத்தில் ரூ.8,384 கோடிதான் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய வர்த்தகத் துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன. தமிழக அரசு இன்னும் சில நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தவிருக்கிறது. அம்மாநாட்டில் பல நிறுவனங் களும் ஏராளமான வாக்குறுதி களை அளிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்த நிலையில் வர்த்தகத் துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் வெளியாயின. மகாராஷ்டிரா மாநிலத்தைத் தவிர கடந்த மூன்றாண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களுக்கு எதிர்பார்க்கப்பட்டதைவிட குறை வாகவே முதலீடுகள் வந்தன.
பாதி முதலீடுகூட வரவில்லை
1 mins read

