சீனாவில் கணக்குப் பாடம் கற்பிக்கும் தமிழக ஆடவருக்கு சிறந்த ஆசிரியர் விருது

சீனாவில் கணக்குப் பாடம் கற்பிக்கும் தமிழக ஆடவருக்கு சிறந்த ஆசிரியர் விருது

2 mins read
c87f915c-8f70-4496-8f34-cbd6a8388f52
-

ஈரோடு: மாணவர்களில் சிலருக்கு கணக்குப் பாடம் என்றால் எட்டிக்காய் போல் கசக்கும். சிலருக்கோ கட்டிக் கரும்புபோல் இனிக்கும். இந்தக் கணக்குப் பாடத்தை கற் பிக்கும் எளிய முறை ஒன்று உள் ளது. அந்தமுறையை தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து திறம்பட கற்பித்து வரும் தமிழக ஆசிரியர் ஒருவருக்கு சீனாவில் விருது வழங்கப்பட் டுள்ளது. சீன அரசுப் பள்ளியில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் விருது பெற்று சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்டம், கிருஷ்ணாம் பாளையத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஐசக் தேவகுமார்.

இவர் சீனாவில் சிறந்த வெளி நாட்டு ஆசிரியருக்கான விருதை 2வது முறையாகப் பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் முறையாக சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதைப் பெற் றிருக்கும் இந்த ஆசிரியர், அண்மையில் இந்த விருதை இரண்டா வது முறையாக வென்றுள்ளார். "மிகவும் எளிமையாகவும் நன்கு புரியும் வகையிலும் விரை வாகவும் கணிதப் பாடத்தை ஆசிரியர் கற்பித்து வருகிறார்.

ஆசிரியரின் திறன்பட கற்பிக்கும் இந்த உத்தி காரணமாக மாணவர்கள் பலரும் கணிதப்பாடத்தில் சிறந்து விளங்குகின்றனர்," என்று சீனப் பெற்றோர் பலரும் பாராட்டு வதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மாணவர்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் கணிதத் தைக் கற்பிப்பதில் சிறந்து விளங் கியதற்காக இந்த விருதைப் பெற்றுள்ள ஐசக் தேவகுமார், "இந்த கற்பிக்கும் திறனை வழங் கிய இந்தியாவுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்," என் றும் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஐசக் என்பவரின் மகனான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சீனாவில் உள்ள அரசுப் பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.